
ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள்
வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய
அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார்.
போய் சாப்பிடு என்றார்
மறுநாளும்
உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார்.
மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை
அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.
அவர்
சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு
வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
இன்றைய
நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார்
வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி
விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.
விற்பனைக்கே
வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து
வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள்
தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.
ஆயிரம்
ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச்
சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை
பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக
இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.
போட்டியில்
ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும்
குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று
நினைப்பார்கள்.
குழந்தை கோப்பை
கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு
விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை
பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு
முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு
சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?
*இதையெல்லாம்
ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.
பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து
இவற்றை கற்றுத்தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான்
என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில
எளிய டிப்ஸ்கள் 😗
100
ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து
நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு
கொடுங்கள்.
பணத்தை
வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில்
வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால்
வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும்
பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம்
உதவும்.
உங்கள்
வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு
வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம்
யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே
பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.
உங்கள்
குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள்
செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச்
சொல்லுங்கள்.
மாதம் ஒருமுறை கணக்கு
பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத்
தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம்
என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக
அமையும்.
தேவையில்லாததையெல்லாம்
வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா
உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது.
தொட்டதெற்கெல்லாம்
அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற
பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனவே
எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின்
அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால
பாடங்கள்.
எப்படித்தான்
பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை
கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு
பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது
நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின்
முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10
ரூபாய் என்று அதிகரிக்கலாம்).