உலகில் முக்கியமாக 3 வகை கொசுக்கள் தான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சர்ரெனால்ட்ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
சார்லஸ் டார்வின் இயற்கைத் தேர்வு மூலமான கூர்ப்புக்கொள்கை அல்லது பரிணாமக் கொள்கையை வெளியிட்ட தினம் இன்று (1858).
அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை மதம் மற்றும் அரசியல் பிரிவுகளிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தபோதிலும், படிவளர்ச்சி அறிவியல் துறையில் சில அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளது. அதே நேரம், வேறு பல அறிவியலாளர்களால் எதிர்க்கப்பட்டும் இகழப்பட்டும் வந்துள்ளது.
தகுதியும் வலிமையும் உள்ள உயிரினங்கள் மட்டுமே உலகில் நிலைத்து வாழும் என்கிறது சார்லஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை.








