20.08.19(செவ்வாய்க்கிழமை)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்கு சமமானவர்கள்" -என சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் பேச்சு
🍒🍒கல்வித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம்
🍒🍒10ம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம்
🍒🍒மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்ற வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு நோட்டீஸ்
🍒🍒அறிவியல் ஆசிரியர் விருது விண்ணப்பிக்க அரசு அறிவிப்பு
🍒🍒பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நடத்த உத்தரவு - மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை
🍒🍒EMIS - NEWS தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
மூன்றாவது மற்றும் நான்காவது இணை சீருடைகள் பெற சத்துணவு உண்பவர்களின் அனுமதி பட்டியலின்படி EMIS வலைதளத்தில் தேவை பட்டியல் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
🍒🍒கல்வித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு
🍒🍒SPD PROCEEDINGS--ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து செயல்பாடுகளையும் புகைப்படங்கள் (photos) மற்றும் ஒளி ஒலி காட்சிகளாக (videos) ஆவணப்படுத்துதல் - விவரங்களை சேகரித்தல் - 'Shagun' - Web portal இல் பதிவேற்றம் செய்தல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அழைத்தல் - சார்ந்து செயல்முறைகள் வெளியீடு
🍒🍒'சுதந்திர தின உரை கருத்துகளே பரிந்துரைக்கப்படும்' :புதிய கல்விக்கொள்கை குறித்து செங்கோட்டையன் தகவல்
🍒🍒ஐ.சி.எஸ்.இ., பாட திட்டம் விரைவில் மாற்றம்
🍒🍒காலாண்டு தேர்வுக்கு பின் 'நீட்' பயிற்சி துவக்கம்
🍒🍒டெல்லியில் 22ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு:
காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன், திமுக எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என
- ஸ்டாலின் அறிவிப்பு
🍒🍒மக்களின் குறைகளை, நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குச் நேரடியாகச் சென்று நிவர்த்தி செய்யும், "முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை", சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
🍒🍒முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது.
🍒🍒50 , 60ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும்
🍒🍒பிரதமர் மோடி வரும் 23ம் தேதி முதல் மூன்று நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்.
🍒🍒கேரளாவில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தவர்களின் உடல்களை மீட்க ரேடார்கள் பயன்படுத்தப்படுகிறது.
🍒🍒சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்
🍒🍒அமெரிக்காவில் சர்வதேச ஊடகங்களுக்கு முதல்முறையாகவும் மிகச் சிறப்பாகவும் பேட்டி அளித்த ஐநாவின் இந்தியப் பிரதிநிதி சையத் அக்பர்தீனுக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்தன.
🍒🍒விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்!! மத்திய அமைச்சர் அவர்களிடம் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தல்
🍒🍒பள்ளிக்கல்வி-இன்று 20.08.2019 காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்விச்செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேவையை தொடக்கம்:
👉பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை வருகிற 26ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.
👉பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த செய்திகளை தொலைக்காட்சி மூலம் கொண்டு செல்வதற்கான முயற்சியாக 24 மணிநேர கல்வி சேனல் ஒன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
👉ஏற்கனவே மாதிரி ஒலிபரப்பு நடைபெற்று வரும் நிலையில், வரும் 26ஆம் தேதி முதல் இந்த தொலைக்காட்சி சேவை முழு பயன்பாட்டிற்கு வர உள்ளது.
👉சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒன்பதாவது மாடியில் இதற்கான கட்டுப்பாட்டு அறை, படப்பிடிப்பு அரங்குகள் போன்றவை அமைக்கப்பட்டு அங்கு இருந்து இந்த சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926








