அப்பட்டமாக ஒன்றுமே தெரியாது என்று சொல்வர்.
தெரியாது என்று ஒப்புக்கொள்வதற்குப் பெயர் தான் அறிவு..!
இது மகாத்மா காந்தியடிகள் அவர்களின் அர்த்தமுள்ள வரிகள்.
இது எல்லாம் அறிந்தும்
அமைதியாக வெற்றி பெற்றவர்களின்
அமுதமொழி..!
தலை முழுவதும் கண்ணாக..
சுத்தமே என்ன..?
என்று அறியாத..
ஆடி மாதத்தில் அமர்க்களமாய்
இனப்பெருக்கம்
செய்து..
சிறு இறகுகள் கொண்டு நோய்களைப் பரப்பும்
வீட்டில் உள்ள ஈக்களை
அறியாதவர் எவருமில்லை..!
கருஞ்சிவப்பு நிறத்தில்..
தன் வழியில்
தடுப்போரை கடித்து குதறிவிட்டு..
அடுத்த நிமிடத்தில்
சாவதற்கும் பயப்படாத
சிற்றெறும்பை
அறியாதவர் எவருமில்லை..!
ஆர்வமுடன் எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளும் ஒரு குணம் வேண்டும்..!
விடாப்பிடியாக எல்லாவற்றையும் அறிந்துக் கொள்ளுவேன் என்ற ஆர்ப்பாட்டமான ஒரு உள்ளம் வேண்டும்..!
அறிவுத் தீ
அறியாமை இருளை
எரிக்கட்டும்..!
எல்லாவற்றையும் அறிந்துக் கொள்வேன் என்ற எதிரொலி எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்..!
அறிந்ததும்-அறியாததும்
அறிதலோடு நிறைவடைந்தது.!
- ப.ஜார்ஜ்.M.Sc.D.T.Ed
22.08.2019








