நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என
கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சிபிஎஸ்இ எச்சரிக்கை
விடுத்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக, இந்திய உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-யில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வு ஆகியவை முக்கியமானவை. இதற்காக, நாடு முழுவதும், சிறப்புப் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில், லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின் நேரடி பள்ளிகளான, கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்துக்கும், இந்த தடை உத்தரவு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. எந்தப் பள்ளியாவது, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தியதாக புகார் வந்தால், அந்தப் பள்ளியின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.