இது யார் குற்றம்? - அரசுப் பள்ளியில் அரங்கேறிய அவலம் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad
Post Top Ad

Join Our Kalvikural Telegram Group - Click Here

Monday, 14 October 2019

இது யார் குற்றம்? - அரசுப் பள்ளியில் அரங்கேறிய அவலம் :


மதுரை பாலமேட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் சரவணகுமார். 11ம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளி விட்டதும் சரவணகுமாரின் புத்தக பையை சக மாணவர்கள் மறைத்து வைத்துள்ளனர். அதற்கு சரவணக்குமார் கோபப்பட்டுள்ளான். ஏன் என் பையை மறைத்து வைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளான்.
அதற்கு சக மாணவர்கள் சரவணக்குமாரை தாக்கி, மேலும் சரவணக்குமாரின் முதுகில் பிளேடை வைத்து கிழித்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் சரவணக்குமார் கத்தியுள்ளான். அக்கம் பக்கத்தினர் சரவணக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக மாணவனின் தந்தை ராமு நம்மிடம், சார் அடிக்கடி என் மகன் வந்து அப்பா நாம் என்ன கீழ் சாதியா? கூட படிக்கும் மாணவர்கள் கேலி பேசுறாங்க. எனக்கு வெக்கமாக இருக்குப்பா. வேற பள்ளியில் சேருப்பா என்பான். எங்கு சேர்த்தாலும் இதே நிலைமைதான்பா. அதெல்லாம் பொருட்படுத்தாத. நல்லா படி அதுபோதும். கல்விதான் நம்மை காப்பாத்தும் என்று அறிவுரை சொல்வேன். 

வீட்டுக்கு வரும்போதெல்லாம் புத்தகத்தை காணும், பேனாவை காணும் உனக்கெல்லாம் சைக்கிளாடா? என்று டயரை பிளேடால் கிழித்து பஞ்சராக்கி விடுவார்கள். நான் பள்ளிக்கு போய் புகார் கொடுக்க போனா, என் மகன் வேணாம், அப்புறம் இன்னும் மோசமாக என்னை ஏதாவது செய்வாங்கன்னு சொல்லி அனுப்பிவிடுவான். ஆனா இந்த முறை என் மகனின் உயிருக்கே ஆபத்து வந்துருக்கு. முதுகில் பிளேடால் கிழித்து இரத்த கிளரியாக ஆக்கியதை என்னால தாங்கி கொள்ள முடியல. அதான் போலீசுல புகாரா கொடுத்திருக்கேன். படிப்புதான் எங்களை உயர்த்தும். சக மாணவர்களே இப்படி கொலை முயற்சி அளவுக்கு போனால் எப்படி படிக்க வைப்பது? இனி என் மகன் என் கூடவே செருப்பு தைக்க கூட்டிக்கிட்டு போகணுமா? நீங்களே சொல்லுங்க. எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் கட்டாயம் என் மகனை படிக்க வைப்பேன். இது என் வைராக்கியம் என்றார். 
இது யார் குற்றம்?

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.