ஈரோட்டின் அடையாளம் மாமேதை ராமானுஜனே....National Mathematics Day 2019: History, Significance and Celebrations - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஈரோட்டின் அடையாளம் மாமேதை ராமானுஜனே....National Mathematics Day 2019: History, Significance and Celebrations

Birth & Death dates :  22 December 1887 – 26 April 1920

ஈரோட்டின் அடையாளம் மாமேதை ராமானுஜனே....

ஏ.டி.எம். இயந்திரம் நாம் கார்டை சொருகியவுடன் பணத்தை தருகிறதே… ராமானுஜம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படியில் தான் அது இயங்குகிறது என்பது தெரியுமா?

பள்ளி செல்லும் நாட்களில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, தினமணிக் கதிரில் ரகமி எழுதிய ராமனுஜன் பற்றிய தொடரை படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன்.

உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் கணித மேதை எப்படி வாழ்ந்தார் என்பதை படியுங்கள். இன்றைக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நம் மாணவர்கள் நம் சகோதரர்கள் நம் பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.

இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும். இராமானுஜனின் தாயார் கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார்.குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்,

ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானஜனோமறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்,

ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.

அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்,

எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனைத் தன்வீட்டிற்கே அழைத்துச் சென்றான், இராமானுஜனைக் காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே இராமானுஜனுக்கும் உணவிட்டாள்,

இராமானுஜன் கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், தொடர்ந்து சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வியையே சந்தித்தார்,

இராமானுஜனின் இல்லம்

1910 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த இராமச்சந்திரராவ் அவர்கள் இராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார். யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் இராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அனுகாதிருந்தது.

1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதி, இராமானுஜன் அவர்கள், இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார், தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றையும் இணைத்து அனுப்பினார். இராமானுஜனின் தேற்றங்களால் கவரப் பட்ட ஹார்டி, இராமானுஜனை இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு அழைத்தார், பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார், இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.

இராமானுஜன் இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார். நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன.

ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எழும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் ஹார்டிக்குத் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.

இந்தியாவிற்குத் திரும்பியபின் இதுநாள் வரை தங்களுக்குக் கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்,

தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட Discovery Of India எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும் மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்காண இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையின் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றிப் புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.

உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.

எது எப்படியோ ……… கணிதத்தையும் கணிதமேதையும் கொண்டாட ஒரு வாய்ப்பு. மிக எளிய குடும்பத்தில் பிறந்து “கொடிது கொடிது வறுமை கொடிது” என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும்.

கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததுபோல் ராமானுஜம், ராமானுஜம் நம்பர் என்கிற ஒன்றை கண்டுபிடித்தார் என்று சில பேராசிரியர்களே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம் ஒரு புறம். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.

பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்தால் சாப்பிட சோறு கிடைக்கும் நிலையிலாவது படைத்திருக்கக்கூடாதா? ஒரு வாய் சோறு பாரதிக்கும் ராமானுஜத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்களை அவர்கள் இந்த உலகிற்கு தந்திருப்பார்களே…..ஏன் கிடைக்கவில்லை? இன்று கணித மேதை சீனிவாசன் ராமானுஜம் பிறந்தநாள்.

டிசம்பர்-22
தேசிய கணித தினம்.. கணிதமேதை சீனிவாச ராமனுஜர் பற்றிய தொகுப்பு..




 


💢 தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த கணிதமேதை ராமானுஜத்தின்  வது பிறந்த நாள் இன்று தேசிய கணித தினமாக பல்வேறு கல்விநிறுவனங்களில் கொண்டாடப்பட்டது.

💢கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர்-22ம் நாள் ஈரோட்டில் பிறந்தார்.

💢இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

💢உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது.

💢பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான்.

💢ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது.

💢ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.

💢ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு.

💢இவர், 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார்.


💢ராமானுஜத்தின் கணித அறிவிற்கு மதிப்பெண் கொடுத்தால் அதற்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன் என்று பிரிட்டன் கணித மேதை ஹார்டி கூறியுள்ளார். அந்த அளவிற்கு எளிமையாகவும், விரைவாகவும் கணித செய்முறைகளை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் ராமானுஜம்.

💢ஹார்டியின் அழைப்பை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு சென்றார் ராமானுஜர். அங்கு சென்ற சில நாட்களிலேயே ராமானுஜனின் திறமை, உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.

💢உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பி அவர் 1920 ஆம் ஆண்டு மறைந்தார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H