இந்நிகழ்ச்சியில்மாணவர்களின் தேர்வு பயம் பற்றிய கேள்விகளுக்குடெல்லியில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பதில் அளித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்கிறார். இந்த நேரடி நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளிலும் நாளை ஒளிபரப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் www.mygov.in என்ற இணையதளம் வாயிலாக ஒரு சிறு\ கட்டுரைபோட்டியை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதி சமர்ப்பிக்க போட்டி நடத்தியது இப்போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறந்த 5 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அதில் சிறந்த கட்டுரைகளை மாநில அளவில் தேர்வு செய்தனர்.
அவ்வாறு தமிழகத்தில் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட 66 மாணவர்களில் ஒரு அரசுப்பள்ளி மாணவி T. ஆராதனா. அம்மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொரடாச்சேரி, திருவாரூர் மாவட்டம், 10 ம் வகுப்பில் பயின்று வருகிறார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள மாணவிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.









