
உடலுக்கு சக்தியும் வலுவும் தரும் தானியங்கள்
உடலுக்கு சக்தியும் வலுவும் தரும்
உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனி இடம் உண்டு. ஒவ்வொரு
தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு
சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம்.
சோளம் உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனை குறைக்கும். வயிற்றுப்புண்,
வாய் துர்நாற்றத்தைப் போக்கும். கோதுமை நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த
உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை
குறைக்கும். உடல் வறட்சியை போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.