சிவகங்கை மாவட்டம் கீழ கண்டனி அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு முருகேசன் அவர்களின் மகன் செல்வன் தயானந்த் வயது பத்து என்பவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது கொடையாளர் கிடைத்து அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடைபெற்று பூரண உடல்நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என நாம் அனைவரின் சார்பாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். சிறுவன் தயானந்த் ஒரு நீச்சல் வீரர் நீச்சல் போட்டியில் தனக்கு கிடைத்த பரிசுகளை வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு கொடையாக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் செல்வன் தயானந்த் கொடையாளர் கிடைத்து அறுவை சிகிச்சை செய்ய சுமார் 35 லட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொகை ஒரு ஆசிரியர் அரசு ஊழியர் குடும்பங்களுக்கு மிகப்பெரிய தொகை எனவே தங்களால் இயன்ற உதவியை செல்வன் தியானத்திற்கும் அவரின் தந்தை TNGTA சிவகங்கை வட்ட பொறுப்பாளர் திரு முருகேசன் அவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்திட வேண்டுமாய் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இவண் மு.கோவிந்தராஜு மாவட்ட செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...