இதுபற்றி முன்னர் வந்த செய்தி...
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைந்ததாக மத்திய அரசின் ஆய்வு குழு கண்டறிந்தது.இதையடுத்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு பொதுவான ஆண்டு இறுதி தேர்வை நடத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. இதை பின்பற்றி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விபரங்களை திரட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.








