நாடு முழுவதும் உள்ள, ஏ.டி.எம்., மையங்களில் மார்ச், 1 முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம் என வங்கி கிளைகளுக்கு, இந்தியன் வங்கி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, அவற்றிற்கு சில்லறை மாற்ற பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஏ.டி.எம்.,களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் தான் அதிகம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளே, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏ.டி.எம்., இயந்திரங்களில், 2,000 ரூபாய் நோட்டுகள் நிரப்புவதை நிறுத்துமாறு வங்கி கிளைகளுக்கு அவற்றின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில், 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் நிரப்பினால் போதும் எனவும், இந்த உத்தரவு மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.