அதுதான் மனநிறைவு (மனதிருப்தி), மனமகிழ்வு (சந்தோஷம்) மற்றும் மன அமைதி (ஷாந்தி).
இந்த மூன்றில், எது ஒன்று இல்லாமற் போனாலும் அந்த மனிதனின் வாழ்க்கை நரகமாகிப் போகும்.
எவ்வளவு பணம், பொருள் இருந்தாலும் இந்த மூன்றும் இல்லையென்றால் அந்த மனிதன் வாழும் காலத்திலே நரகவேதனையை அனுபவிக்கிறான்.
அத்தகைய அத்தியாவசியமான மூன்றை நாம் வழிபாட்டின் மூலம் பெறலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது கடவுளை வழிபடுவதால் நாம் மனநிறைவு, மனமகிழ்வு மற்றும் மன அமைதி ஆகியவற்றைப் பெறலாம்.
இவை இருக்கப்பெற்றாலே, அந்த வாழ்க்கை சொர்க்கமாகின்றது.
அதனிலும் மேலான சொர்க்க லோகங்கள் இல்லை.
”மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.”
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.”
ஓம் நமச்சிவாய...!
ஆன்மீக வாழ்க்கைக்கு இறை நாம ஜெபம் அவசியம் என்பதை அனைவருக்கும் எடுத்துரைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!








