நாடு விட்டு நாடு நான் பெரியவன் நீ சிறியவன் என்றாய் . கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய மதங்களை நான் பெரியவன் நீ சிறியவன் என்ற அகங்காரத்தால் அழித்து விட்டாய்.
இயற்கையாகப் பிறக்க வேண்டிய குழந்தைக்கு நான் தேதி குறித்தால், நீ பிறக்கும் தேதியை மாற்றுகிறாய்.
உன்னுடன் சேர்ந்து வாழ ஐந்தறிவு ஜீவன்களைப் படைத்தேன் அதையும் நீ வாழ விடவில்லை அனைத்தையும் கொத்து கொத்தாகக் கொன்று உண்டாய். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் படைக்கப்பட்ட உணவு தானியங்களை விஷமிட்டு விளைய வைக்கிறாய் .
நான் கண்டத்தைப் பிரித்து கடல் தாண்டாதே கண்டம் விட்டு கண்டம் போகாதே என்றேன் . நீயோ எதிர்மறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளைக் கண்டு பிடித்து மக்களை அச்சுறுத்திகிறாய்.
உங்கள் பயன்பாட்டுக்காக படைத்த குதிரை வண்டி, மாட்டுவண்டி , ஒட்டகவண்டி , பொதிசுமக்கும் கழுதை , யானைகள் அனைத்தையும் அழித்து விட்டு கனரக வாகனத்திற்கும், சொகுசுக் காருக்கும் சென்று விட்டீர்கள்.
மக்கள் மீது சூரியக் கதிர் நேரடியாக விழாக் கூடாது என்று ஒரு படலத்தை உருவாக்கிக் கொடுத்தேன் அதில் ஓட்டைப் போட்டு கோட்டை விட்டாய் (ஒரு வாரம் இந்த உலகம் அமைதி காத்து ஊரடங்குக்கே வாகனபுகை இல்லாத உலகம் ஓசோனை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.)
புழு பூச்சி செடி கொடி மரங்களைப் படைத்தால் சுகாதாரமாக இருப்பாய் என நினைத்துப் படைத்தேன். நவீன அறிவியல் என்ற பெயரில் சுற்றுச்சூழலை குழி தோண்டி புதைத்து விட்டாய்.
பூமியில் படைத்த அனைத்து உயிர் இனங்களும் வாழ நீர்வளத்தைக் கொடுத்தேன் மனித இனமோ பூமித்தாயின் உடலில் ஓட்டை இல்லாத இடமே இல்லாத அளவிற்க்கு ஓட்டை போட்டுக் கொத்து உயிரும், கொலை உயிருமாக ஆக்கி விட்டாய்.
என்னை வணங்கி நடந்த மன்னரும், மன்னர் ஆட்சி மக்களும் செழிப்பான வாழ்வை அடைந்தார்கள். இன்று கலியுகம் என நினைத்து கருவறையில் களி ஆட்டம் போட்டாய்,
அதனால் தான் மௌனம் ஆனேன். ஏப்ரல் 14ந் தேதி வரை கட்டுப்பாட்டுடன் வீட்டிலேயே இல்லையெனில் உன்னை மன்னிக்க மாட்டேன். உனது உயிர் என்னால் படைக்கப்பட்ட எமதர்மனிடம் உள்ளது.
முடிவை நீ எடுத்துக் கொள் , நான் ஓய்வெடுக்கிறேன் .
பகிர்வு








