
மனித உடலின் இயல்பான சராசரி வெப்பநிலை 37' C (98.6' F) டிகிரி வெப்பநிலை.
உலகில் எல்லா நாடுகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் வாழும் அனைவருக்கும் 37'C டிகிரி சராசரி உடல் வெப்பநிலைதான் இருக்கும்.
இந்த இயல்பான வெப்ப நிலையில்தான் நமது செரிமான சுரப்பிகள் நன்கு இயங்கி
நாம் உண்ட உணவை குருதியாக மாற்றி நமக்கு வளர்சிதை மாற்றத்திற்கான ஆற்றல்களை
தருகிறது.
நாம் குளித்தவுடன், நமது உடலின் சராசரி வெப்பநிலை குறைந்துவிடும். மீண்டும்
உடல் வெப்ப கட்டுப்பாடு உறுப்புகள் இயல்பான உடல் வெப்ப ஆற்றலுக்கு இயங்க
ஆரம்பிக்கும்.
குறைந்தபட்சம் முக்கால் மணி நேரம் கழித்தே நமது உடல் மீண்டும் இயல்பான வெப்ப நிலைக்குத் திரும்பும்.
குளித்தவுடன் சாப்பிட்டால்…
செரிமான உறுப்புகள் இயங்காமல் வெப்பக் கட்டுப்பாடு இயக்கத்திற்கு நமது உடல்
ஆற்றல் மாறுகிறது. அதனால், உணவு செரிமான பிரச்சினை ஏற்பட்டு வயிறு மந்தமாக
இருக்கும்.
அதனால், குளித்து முக்கால் மணி நேரம் கழித்தே உணவு உண்ணவேண்டும்.
அதிகாலை பள்ளி செல்லும் மாணவர்கள், பணியாளர்கள் காலை உணவு உண்பதற்கு ஒரு மணிநேரம் முன்பே குளித்துவிட வேண்டும்.
அதேபோல், உணவு உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும்.