பெரும்பாலான ஆண்கள் துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, சமையலுக்கு உதவியாக காய்கறி நறுக்கி கொடுப்பது ஆகிய வேலைகளை செய்து பொழுதை கழிக்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் செம குஷியில் உள்ளனர். இதுபற்றி திருச்சி பீமநகரை சேர்ந்த இல்லத்தரசி சுமதி கூறுகையில், ‘‘எனது கணவர் சமையலறை பக்கமே எட்டிக்கூட பார்க்க மாட்டார். குடிக்கும் தண்ணீரை கூட அவர் இருக்கும் இடத்துக்கு தான் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அப்படி இருந்த அவரே, நேரம் போகாததால், பாத்திரம் கழுவுதல், துணி துவைப்பது ஆகிய வேலைகளை செய்கிறார். மேலும் குழந்தைகளுடன் ஜாலியாக பேசி கேரம் போர்டு விளையாடுகிறார்.
தந்தை வீட்டிலேயே இருப்பது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார். வீட்டு வேலை செய்தல், டிவி பார்க்கும் நேரம் போக மற்ற நேரங்களில் ஆண், பெண் வித்தியாசமின்றி செல்போன்களில் மூழ்குகின்றனர். உறவினர்கள், நண்பர்களிடம் பேசுவது, சமூக வலைதளங்களில் உலா வருவது, கேம்கள் விளையாடுவது என நேரத்தை போக்குகின்றனர். இரண்டு நாள் வீட்டுக்குள் இருந்ததே கண்ணை கட்டுகிறது. 21 நாட்கள் எப்படி இருக்க போகிறோம் என்று ெதரியவில்லை. நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் இருந்து தான் ஆக வேண்டும். செல்போன் மட்டும் இல்லனா அவ்வளவுதான் சாமி என செல்போனை பார்த்து கையெடுத்து கும்பிடுகின்றனர் சில ஆண்கள்.
புலம்பும் குடிமகன்கள்
தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களின் பாடு தான் திண்டாட்டமாக உள்ளது. அதிகபட்சமாக ஒரு நாள் அல்லது 2 நாள் விடுமுறை விடுவார்கள். தேவையான மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளலாம். இவ்வளவு நாள் விடுமுறை விட்டால், எப்படி இருப்பு வைக்க முடியும். அப்படியே இருப்பு வைத்தாலும், முன்கூட்டியே காலியாகி விடும். கள்ள மார்க்கெட்டில் அதிகவிலை கொடுத்து வாங்கலாம் என்றாலும் வெளியில் நடமாட முடியவில்லை. எப்படி சமாளிக்க போகிறோமோ என்று தெருக்களில் சந்தித்துக்கொள்ளும் குடிமகன்கள் புலம்பி வருகின்றனர்.








