நாட்டுக்கு நாடு நேரம் மாறுவதற்கு இதுதான் காரணம்.
தற்போது எனது கடிகாரத்தில் மாலை 4.10 மணி, தற்போது சீனாவின் பீஜிங்
நகரில் மாலை 6.40 மணி, ஜப்பானின் டோக்கியோ நகரில் மாலை 7.40 மணி,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலை 6.40 மணி, இங்கிலாந்தின்
கேம்பிரிட்ஜ் நகரில் காலை 11.40 மணி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்
நகரில் பகல் 12.40 மணி. இங்கிருந்து ஆகாய விமானத்தில் அமெரிக்கா
செல்பவர்கள் இரண்டு பகல்களையோ அல்லது இரண்டு இரவுகளையோ தொடர்ந்து சந்திக்க
வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன. நாட்டிற்கு நாடு ஏன்
மணி மாறுகிறது.
பூமியின் ஒரு பகுதி சூரியனை நோக்கி இருக்கும் போது மறுபகுதி
பின்பக்கமாக இரவாக இருக்கும். ஒரு பகுதியில் சூரியன் உதயமாகி
கொண்டிருக்கும்போது மறுபகுதியில் சூரியன் அஸ்தமனமாகி கொண்டிருக்கும். இதை
துல்லியமாகக் கணக்கிடுவதற்காக பூமியின் வட துருவத்திலிருந்து தென் துருவம்
நோக்கி 48 கற்பனைக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இவைதான் தீர்க்க ரேகை என
அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டிற்கும் அரை மணி நேர இடைவெளி இருக்கிறது.
எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் இணைந்து 24 மணி நேரத்தை பூமியின் எந்தப்
பகுதியில் முதலில் தொடங்குவது என முடிவு செய்தனர். இங்கிலாந்தின்
கிரீன்விச் என்ற இடத்தில் தான் நேரம் துவங்குகிறது. Greenwich Meridian
Time ( GMT ) என அழைக்கப்படுகிறது அதிலிருந்து அடுத்தடுத்த கோடுகள் 30
நிமிடம் கூடுதலாகிக் கொண்டே வரும். கடைசியாக 24 மணி நேரம் மீண்டும்
கிரீன்விச் வழியே செல்லக்கூடிய கோட்டிற்கு வந்துவிடும். உதாரணமாக இந்தியா
கிரீன்விச்சிஸ்லிருந்து பதினோராவது கோட்டில் இருக்கிறது. எனவே நமது
நாட்டின் நேரம் Indian Standard Time ( IST ) = GMT +5.30 ஆகும். உங்கள்
மொபைல் போனின் டைம் செட்டிங்ஸ் பார்த்திருந்தீர்கள் என்றால் இதைப்
பார்த்திருக்கலாம்.