
ஊரடங்கு உத்தரவை மீறி கறி விருந்து நடத்திய பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை
மாவட்டம் மணல்மேடு அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட
இளைஞர்கள் சேர்ந்து பிரியாணி சமைத்து கூட்டமாக சாப்பிட்டதுடன், அதனை
வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளமான டிக்டாக்கில் பதிவேற்றனர். அந்த
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவர்களை பிடிக்க மூன்று தனிப்படை
அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் வில்லியநல்லூர் கிராமத்தை சுற்றிவளைத்து, பிரியாணி விருந்தில் பங்கேற்ற 10 நபர்களைக் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் மணல்மேடு காவல் ஆய்வாளர் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றமாட்டோம் என உறுதிமொழி ஏற்கவைத்து எச்சரித்த போலீஸார், ஊரடங்கு அமலில் உள்ளதால், காவல்நிலைய பிணையில் அவர்களது பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.