அரசாணையில் , முதன்மை கல்வி அலுவலர் நிலையில்
பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டும் , மாவட்டக்
கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலராக
பதவி உயர்வு அளித்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேற்காணும் அரசாணையில் , மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி
அலுவலர்கள் , தனது பணியிட பொறுப்புகளை மாவட்டத்தில் உள்ள மூத்த மாவட்டக்
கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் சேருமாறும் ,
பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி
அலுவலரால் நியமனம் செய்யப்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியரிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில்
பணியில் சேருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . மாவட்டக் கல்வி அலுவலர்
பொறுப்பு நியமனத்திற்கான பின்னேற்பு ஆணை கோரி , தனியே கருத்துரு
அனுப்புமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
மேற்கண்டவாறு முழு கூடுதல் பொறுப்பேற்கும் அலுவலர் / தலைமை ஆசிரியர்கள்
புதிய அலுவலர் பணியேற்கும் வரை உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி
அதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது.
பணிவிடுவிக்கப்படும் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரிந்த அலுவலர்கள் சார்பாக
மந்தண அறிக்கைகள் எழுத வேண்டியிருப்பின் , அதனை முடித்துவிட்டு புதிய
பணியிடத்தில் சேருமாறும் , பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்பு அறிக்கையினை
உடன் இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .