பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்ற பிறகு மாணவர்களின் நலன் கருதி பணி
நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு
அரசாணை பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை தங்களுக்கும் வழங்கக்கோரி ஏராளமான ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.இதுபோன்ற மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரர்களை பணியிலிருந்துவிடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
CLICK HERE TO DOWNLOAD

கல்வி ஆண்டின் மத்தியில் ஓய்வு பெற்றதால் மாணவர்களின் நலன் கருதி ஒப்பந்தஅடிப்படையில் அவர்களுக்கு கல்வி ஆண்டு முடிய பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.