ஜோதிட சாஸ்திரத்தில் நம்முடைய அனைத்து கடன்களும் தீர , நம்மை மாபெரும் குபேரனாக மாற்ற கூடிய அபூர்வ நேரத்தை மைத்ர முகூர்த்தம் என கூறுவர்
இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது… ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது…
பெருங்கடன் தீர்ந்திட இன்னும் ஒரு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது.
மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும்.
செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும். செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.