வைகாசிச் செவ்வாய்க்கிழமையில், சங்கடஹர சதுர்த்தி வருகிறது. நாளைய தினம் 9.6.2020 சங்கடஹர சதுர்த்தி. இந்தநாளில், விநாயகரை அருகம்புல் சார்த்தி வழிபடுங்கள். தீயனவெல்லாம் அழியும். சங்கடமெல்லாம் தீரும்.
சிவபெருமானுக்கு சிவராத்திரி மாதந்தோறும் வருவது போல, முருகப்பெருமானுக்கு சஷ்டி வருவது போல, விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை சங்கடஹர சதுர்த்திஎன்று போற்றுகிறார்கள். மிகுந்த விசேஷமான நாள் இது. சாந்நித்தியம் நிறைந்தநாள் என்கிறது சாஸ்திரம். பிரதோஷ பூஜை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை நடத்தப்படுவது போல், சங்கடஹர சதுர்த்தியும் இதே நேரத்தில், அதாவது மாலை வேளையில், 4.30 முதல் 6 மணி வரை நடத்தப்படவேண்டிய பூஜை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
CLICK HERE TO DOWNLOAD

சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை காலையும் மாலையும் பூஜிக்கவேண்டும். காலையில் விளக்கேற்றி, விநாயக அகவல் பாடி, துதிக்கலாம். விநாயகரின் திருநாமங்களைச் சொல்லிப் பாராயணம் செய்யலாம்.
அதேபோல், மாலையில் விளக்கேற்றுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். அருகம்புல்லுக்கு தீயதையெல்லாம் அழிக்கும் சக்தி உண்டு என்கிறது சாஸ்திரம். ஒரு கைப்பிடி அளவு அருகம்புல்எடுத்து ஆனைமுகனுக்கு சார்த்தினாலே போதும்... அவர் குளிர்ந்து அருள்வார்.
அருகம்புல் எப்படி விநாயகருக்கு விசேஷமோ... அதேபோல, வெள்ளெருக்கம்பூவும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது. வீட்டு தோஷமெல்லாம் போக்கும் வலிமை வெள்ளெருக்கம்பூவுக்கு உண்டு. எனவே, வைகாசிச் செவ்வாய்க்கிழமையில், சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், மாலை வேளையில், வீட்டில் விளக்கேற்றுங்கள். விநாயகரை வழிபடுங்கள். அருகம்புல்மாலையும் வெள்ளெருக்கம்பூமாலையும் சார்த்துங்கள்.
விநாயகர் புராணம் படியுங்கள். மகா கணபதி மந்திரம் உச்சாடனம் செய்வது அதீத பலன்களைத் தந்தருளும். விநாயகர் காயத்ரி சொல்லி சிதறுகாய் உடைப்பதும் துர்சக்திகளையெல்லாம் விரட்டும் வல்லமை கொண்டது.
சுண்டல் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். நம் கஷ்டமெல்லாம் தீரும். நம் சங்கடங்களையெல்லாம் தீர்ப்பார் சங்கரன் மைந்தன்!
9.6.2020 செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி.