மற்ற மாவட்டங்களில், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.சென்னையில், மாலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக, 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். இன்றும், நாளையும், ஆறு மாவட்டங்களில் வெயில் அதிகமாக பதிவாகும்.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இருக்கும்.தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் கிழக்கு அரபி கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.








