நெருப்பு வளையம்' (Annular) என்று அழைக்கப்படும் சூரிய கிரகணம் ஜூன் 21, 2020 அன்று நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு, நெருப்பு வளைய சூரிய கிரகணம், டிசம்பர் 26-ம் தேதி 3 மணிநேரம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு, 2020-ல் நடக்கக்கூடிய முதல் சூரிய கிரகணம் இதுவே. 21-ம் தேதி தோன்றும் இந்தக் கிரகணத்தைத் தமிழக மக்கள் மட்டுமின்றி சமோலி, டேராடூன், ஜோஷிமத், குருக்ஷேத்ரா, சிர்ஸா மற்றும் சூரத்கர் ஆகிய இடங்களிலும் பார்க்க இயலும்.
21-06-2020 அன்று நிகழப்போகும் சூரிய கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும். சில தினங்களுக்கு முன்புதான் ’புறநிழல் சந்திர கிரகணம்’ எனப்படும் பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இது இந்தியாவில் தெரியவில்லை. ஆனால் இன்று நிகழப்போகும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.
<>சூரிய கிரகணம்
காணப்படுகின்றது. சூரிய கிரகண நிகழ்வின்போது, சூரியனின் உருவம் முற்றிலுமாகவோ அல்லது ஓரளவுக்கோ மறைக்கப்படுகின்றது. சந்திரனின் வெளிப்படையான விட்டம் சூரியனை விடச் சிறியது. இந்த நிகழ்வு சூரிய ஒளியின் பெரும்பகுதியைத் தடுக்கிறது. இதனால் சூரியன் ஒரு வளையம் போலத் தோற்றமளிக்கும்.
சூரிய கிரகணங்களை - மொத்தம், பகுதி மற்றும் நெருப்பு வளையம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் காணப்படுகிறது. பகுதி கிரகணத்தில், சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை உள்ளடக்கி மறைத்துக்கொண்டு மீதமுள்ள சூரியனைக் காணும்படி செய்கிறது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் சூரியனை முழுமையாக உள்ளடக்கி மறைத்து வைக்க முயலும். ஆனால் ஒப்பீட்டளவில் சூரியனைவிடச் சந்திரனின் பரப்பளவு குறைவு. சூரியனைவிடச் சிறியதாக இருப்பதால் சூரியனின் வெளிப்புற வளையம் மக்களுக்கு முற்றிலும் தெரியும்.
சூரிய கிரகணம்
காலை 9:15 மணிக்கு (IST) தொடங்கி மாலை 3:04 மணி வரை தொடரும்.
Eclipse' x='0' y='0' height='100%25' width='100%25' xlink%3Ahref='data%3Aimage/jpeg;base64,/9j/4AAQSkZJRgABAQAAAQABAAD/2wBDABALDA4MChAODQ4SERATGCgaGBYWGDEjJR0oOjM9PDkzODdASFxOQERXRTc4UG1RV19iZ2hnPk1xeXBkeFxlZ2P/2wBDARESEhgVGC8aGi9jQjhCY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2P/wAARCAAGAAkDASIAAhEBAxEB/8QAFQABAQAAAAAAAAAAAAAAAAAAAAb/xAAfEAACAQIHAAAAAAAAAAAAAAAAAgEDEQQFEhVVo9H/xAAVAQEBAAAAAAAAAAAAAAAAAAAABP/EABsRAAEEAwAAAAAAAAAAAAAAAAEAAhFhBBJB/9oADAMBAAIRAxEAPwCLw1RIdFZNVpvJbb1knF9a+gEWawO1m+mkBglf/9k='%3E%3C/image%3E%3C/svg%3E)
நாளை காலை 9:15 மணிக்கு (IST) தொடங்கி மாலை 3:04 மணி வரை தொடரும். இந்தச் சூரிய கிரகணத்தின் நீளம் சுமார் 6 மணி நேரம். இதை மதிய 12:10 மணியளவில் கவனித்தால் தெளிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் காணப்படும் சூரிய கிரகணம் காலை 10:12 மணிக்கு ராஜஸ்தானின் கர்சனா அருகே தொடங்கும். அதன் உச்சகட்டம் காலை 11:49 மணியளவில் தொடங்கி காலை 11:50 மணிக்கு முடிவடையும் என்று பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் டெபி பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள சூரத்கர் மற்றும் அனுப்கர், ஹரியானாவில் உள்ள சிர்சா, ரதியா, குருக்ஷேத்ரா, மற்றும் உத்தரகண்டில் உள்ள டேராடூன், சம்பா, சமோலி, ஜோஷிமத் ஆகிய இடங்களில் நெருப்பு வளையத்தை ஒரு நிமிடம் மட்டுமே காணமுடியும்.
சூரியனை 99.4 சதவீதம் மறைக்கும் சந்திரன், வட இந்தியாவில் நன்றாகத் தெரியும் என்று நாசா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மேலும் மூன்று கிரகணங்களை நாம் பார்க்க முடியும். ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் காணப்படும் முதல் இரண்டும் சந்திர கிரகணமாகவும் மூன்றாவது டிசம்பர் 14-ம் தேதி சூரிய கிரகணமாகவும் நிகழும்.
கிரகணத்தைப் படம் பிடிப்பதற்கான உபகரணங்கள்' x='0' y='0' height='100%25' width='100%25' xlink%3Ahref='data%3Aimage/jpeg;base64,/9j/4AAQSkZJRgABAQAAAQABAAD/2wBDABALDA4MChAODQ4SERATGCgaGBYWGDEjJR0oOjM9PDkzODdASFxOQERXRTc4UG1RV19iZ2hnPk1xeXBkeFxlZ2P/2wBDARESEhgVGC8aGi9jQjhCY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2NjY2P/wAARCAAGAAgDASIAAhEBAxEB/8QAFQABAQAAAAAAAAAAAAAAAAAAAAP/xAAeEAABAwQDAAAAAAAAAAAAAAABAAIDBAUSFCEiMf/EABQBAQAAAAAAAAAAAAAAAAAAAAP/xAAWEQEBAQAAAAAAAAAAAAAAAAAAAQL/2gAMAwEAAhEDEQA/ALXnYiukzqaofG1ohMoPYOydjwD4iIlyOv/Z'%3E%3C/image%3E%3C/svg%3E)
சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாக வெற்றுக் கண்களால் காணக்கூடாது. அப்படிப் பார்த்தால் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கண் பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளது. சூரிய கிரகணத்தைக் கண்காணிப்பதற்கான பாதுகாப்பான நுட்பம் - அலுமினிய மைலர், கறுப்பு பாலிமர், வெல்டிங் கிளாஸ் நிழல் எண் 14 போன்ற சரியான பில்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பார்ப்பது மற்றும் தொலைநோக்கி மூலம் ஒரு வெள்ளைப் பலகையில் சூரியனின் படத்தைக் காண்பதே பாதுகாப்பானது. நிகழ்வை டி.எஸ்.எல்.ஆர் மூலம் படம்பிடிக்க விரும்புவோர் உங்களிடம் சூரிய கிரகண வடிகட்டி (solar eclipse filter) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் சூரியனின் கதிர்கள் உங்கள் சென்சாருக்குச் சேதம் விளைவிக்கும்.
சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடியவை
நீங்கள் கிரகணத்தைப் பார்க்க விரும்பிச் சாலையோரத்தில் காரை நிறுத்தினால், பார்க்கிங் லைட்டுகளை எரிய விட்டுக் கொள்ளுங்கள். அதேநேரம், கிரகணத்தைப் பார்ப்பதற்குரிய சாதனங்களைக் கையோடு வைத்துக்கொள்ளுங்கள். இல்லையேல், பைனாகுலர், டெலஸ்கோப், பாதுகாப்புக் கண்ணாடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், வெறும் கண்களில் மட்டும் பார்க்கவேண்டாம். பொதுவாக, நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் கூலர் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் நன்றாகத் தெரியுமென்று பலரும் கருதுவதுண்டு. அவற்றில் கிரகணம் தெரிந்தாலும்கூட, அதன் கதிர்கள் கண்களைப் பாதிப்பதைத் தடுப்பதில்லை. ஆகவே, வல்லுநர்கள் அத்தகைய கூலர் கண்ணாடிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கூறுகின்றனர்.
கிரகணத்தின்போது, வாகனங்களின் ஹெட்லைட்டுகளை எரியவிட்டுக் கொண்டே வாகனத்தை ஓட்டுங்கள். அந்த நேரத்தில் (குறைவான நேரம்தான் என்றாலும்) இருட்டு கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாமென்று கணிக்கப்படுவதால் அந்த நேரத்தில் விபத்துகள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இருட்டு தொடங்கும் நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டும். கிரகணம் மக்களுடைய கவனத்தை ஈர்க்கும் என்பதால், எதிரில் வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு வேண்டும். கொரோனா காலம் என்பதால் உங்கள் பகுதியில் ஊரடங்கு இல்லையென்றாலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கலாம்