தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரானா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு பல்வேறு வழிகளில் கையாண்டு வருகிறது.
பொது வெளிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பாதுகாப்பு வழிமுறைகளை பெரும்பாலானவர்கள் பின்பற்றவில்லை.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்கப்படும். இரண்டு வார தேவைக்கான பொருட்களை வீடுகளில் வாங்கி வைத்துக் கொள்ள மக்களை அரசு அறிவுறுத்தும். இந்த காலகட்டத்தில் ஆவின்பால் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக அரசு சப்ளை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இல்லை என்றால், ஜூலை மாத மத்தியில் சென்னையில் வாழும் மற்ற மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராவார்கள். தமிழத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டால் வைரஸ் பரவல் தமிழகமெங்கும் ஊடுருவி விடும் எனவே முழு ஊரடங்கு நடவடிக்கையை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.