பல்வலி குணமாக என்ன செய்ய வேண்டும்
பல் வலியை யாராலும் தாங்க முடியாது. பற்களில் பொதுவாக வலி சொத்தை பற்களினால், பல்
உடைந்தோ அல்லது வீறிட்டு இருந்தாலோ ஏற்படும் அல்லது பற்பசை தொற்று நோய் வலியாகவோ,
கடவாய் பற்கள் வளரும் போது ஏற்படும் வலியாகவோ இருக்கலாம் .
பற்களில் வலி இருந்தால்
அதிக சூடாகவும், குளிராகவும் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. அது வலியை மேலும்
அதிகரிக்கும்.
தலையை உயர்த்தி படுத்துக் கொள்ளுங்கள். பற்கள் மீது ஏற்படும்
அழுத்தத்தை குறைக்கும். பெப்பர்மின்ட் எண்ணெய் பயன்படுத்தலாம்.
சிறிது காரமாக
இருக்கும் என்பதால், வலிக்கு நன்றாக இதமாக இருக்கும். மிதமான சூடு உள்ள தண்ணீரில்,
கல் உப்பை கலந்து வாய் கொப்பளித்தால், வலி நீங்கும். வீக்கம், தொற்று இருந்தாலும்
நீங்கி விடும்.
இந்த எளிய முறைகளை பின்பற்றி பல் வலியில் இருந்து விடுபடுங்கள்.
நீண்ட நாட்கள் தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.