
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வரும் 13ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் என-
அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு... தேதி அறிவிப்பு..
அரசுப் பள்ளிகளில் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்
கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளன. இந்தியாவும்
கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள்
மூடப்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. தொற்று நோய் பரவி வரும்
சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது நடக்காத காரியமாக இருக்கிறது. இதனால் சில
மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கத்
தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான
சாத்தியம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கெனவே
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்லைன்
கல்வி முறை தொடக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தனியார்
பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம்
கற்பிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.