கல்வி அலுவலகங்களில் மட்டும், கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட, அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:காமராஜர் பிறந்த நாளான, ஜூலை, 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக, அரசால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றால், பள்ளிகள் செயல்படாததால், கல்வி வளர்ச்சி நாளை, கல்வி அலுவலகங்களில் கொண்டாட வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில், காமராஜரின் உருவ படத்தை அலங்கரித்து, கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.