தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை! - முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!
மக்களின்
வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேலும் முழு ஊரடங்கு நீட்டிக்க போவதில்லை
என்று முதல்வர் பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். கொரொனாவை தடுக்க
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தால் நோய் பரவல் குறையும்,
பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.