மேஷ ராசி
ஒரு சிலரிடம் மாற்றத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் உங்கள் எண்ணம் நிறைவேற பெறுவீர்கள், திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும், கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் அன்னியோன்யம் அதிகரிக்கும்,
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும், கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு, உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
ரிஷப ராசி
வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு திட்டமிடுவீர்கள், எதிர்கால சேமிப்பு பற்றிய எண்ணங்கள் மனதில் எழும் இவைகளை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள், ஒருசிலருக்கு சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும், இவைகளை துவக்கலாம்.
சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து விடும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும், மன அமைதி கிடைக்கும்
மிதுன ராசி
நிர்வாகத்தில் நல்ல பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றமும் புதிய இடமாற்றத்திற்கான அறிகுறிகளும் தென்படும். இவைகளில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடக ராசி
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பத்தக்க இடமாற்றம் ஏற்படும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். சொத்துக்கள் வாங்குவது வாகனங்கள் வாங்குவது தொடர்பான செயல்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
சிம்ம ராசி
எதிர்பாராத பண உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஒன்று உங்கள் காதலை திருமணத்தை நோக்கி திருப்புவதற்கான சரியான நாளாகும்.
மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள். முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் என்பதால் பல புதிய கல்வி வாய்ப்புக்கள் உங்கள் கண்முன் தென்படும்.
கன்னி ராசி
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பை முடித்து வேலை உத்தியோகத்தில் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பெண்களுக்கு இனிமையான நாளாக தாங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
துலாம் ராசி
இட மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் தாங்கள் விரும்பக்கூடிய நல்லபடியான இடமாற்றங்கள் கிடைக்கும். விசா தொடர்பான காரியங்களை ஆரம்பிப்பதற்கு சரியான நாளாகும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்
விருச்சிக ராசி
குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அன்னியோன்னியம் அதிகரிக்கும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் பொறுமையைக் கைக் கொள்வது அவசியம். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய தொழில் வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்காமலும் செயல் படுத்தாமல் இருப்பது நல்லது.
மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் வயதானவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.
தனுசு ராசி
ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்கள் புதிய உயரங்களை தொடுவார்கள். உத்தியோகத்தை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சரியான வேலை வாய்ப்புகள் அமையும். வேலைவாய்ப்புகளில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் உண்டாகும் சகோதர சகோதரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். அரசியல் தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
மகர ராசி
உத்தியோகம் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றியடைவார்கள். சற்று பிரச்சினைகளை சந்தித்தாலும் வெற்றி அடைவார்கள். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சற்று காலதாமதம் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது.
மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு சற்று பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தீர்வுக்கு வந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும் ஆரோக்கியம் நன்றாக உள்ளது.
கும்ப ராசி
சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் பெறுவீர்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டு. இவைகள் வாங்குவதற்காக ஒரு சிலருக்கு கடன் பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். இருப்பினும் வெற்றி நிச்சயம் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.








