Human body Normal leavel மருத்துவ அளவீடுகள். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 7 July 2020

Human body Normal leavel மருத்துவ அளவீடுகள்.


1.இரத்தத்தின் pH அளவு 7.35 - 7.45  என்ற அளவில் இருக்கும்.

2.சிறுநீரின் pH அளவு 4.5 - 8.0 என்ற அளவில் இருக்கும்.

3.இரத்தத்தில் கால்சியத்தின் (Calcium)அளவு 8.5 முதல் 10.5 Mg/100 மி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

4.இரத்தத்தில் குளோரின் (Chlorine)அளவு 97 முதல் 106 Mg/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

5.இரத்தத்தில் கொலஸ்ட்டிரால் (Cholesterol)அளவு 140-200மி.கி/ஃ100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

6.இரத்தத்தில் குளுக்கோஸ் (Glucose)அளவு 63-144 மி.கி /100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

7.உணவு அருந்தாதபோது (Fasting)இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 65-105 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

8. ஒரு லிட்டர் இரத்தத்தில் பொட்டாசியத்தின்(Pottasium) அளவு 3.3-4.7 mEq/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

9. ஒரு லிட்டர் இரத்தத்தில் சோடியத்தின் (Sodium)அளவு 135-143 mEq/லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

10.இரத்தத்தில் யூரியாவின் (Urea)அளவு 15 முதல் 44 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

11.நடுவயதினரின் இரத்த அழுத்தம் (Blood Pressure)சுமார் 120/80 மி.மி. மெர்குரி என்ற அளவில் இருக்கும்.

12.நாடித்துடிப்பு (Pulse Rate)ஒரு நிமிட நேரத்தில்சுமார் 60க்குக் கீழே இருந்தால்அது பிராடிகார்டியா (Bradycardia)எனப்படும்.

13.டேக்கிகார்டியா (tachycardia)என்னும் நிலையில் நாடித்துடிப்பு ஒரு நிமிட நேரத்தில்சுமார் 100க்கு மேல் இருந்திடும்.


14.சுவாசத்தின் இயக்கம் (Respiratory Activities)ஓய்வு நிலையில் ஒரு நிமிட நேரத்தில்சுமார் 15 முதல் 18 வரை என்ற அளவில் இருந்திடும்.

15. சாதாரணமாக எப்போதும் போல சுவாசிக்கும் போது(உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில்(Inspiratory Air) வாயுமாற்றத்திற்கு பயண்படுத்தப்பட்டகாற்றின் அளவு டைடல் வால்யூம் (Tidal Volume) எனப்படும்) டைடல் வால்யூம் என்பவைசுமார் 500 மில்லி என்ற அளவில் இருந்திடும்.

16. உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில் வாயுமாற்றத்திற்குபயண்படுத்தப்படாத காற்றின் அளவு டெட்ஸ்பெஸ் (Dead Space Air)என்பது சுமார் 150 மில்லி லிட்டர் என்றஅளவில் இருந்திடும்.

17.ஒரு கிராம் கார்போஹைட்ரேட் (Carbohyrate)என்னும் மாவுப்பொருளில் இருந்து 4 கிலோ கலோரி   (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

18.ஒரு கிராம் புரதப் பொருளில் இருந்து 4 கிலோ

கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

19.ஒரு கிராம் கொழுப்பு பொருளில் இருந்து 9 கிலோ

கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

20.நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டின்

விகித அளவு சுமார் 55 முதல் 75 சதவிகிதம் வரை

இருந்திட வேண்டும்.

21. நாம் சாப்பிடும் உணவில் புரோட்டின் வகை உணவின் விகித அளவு சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை இருந்திட வேண்டும்.

22.சிறுநீரின் அடர்த்தி எண் (Specific Gravity )சுமார் 1.020 முதல் 1.030வரை இருந்திடும்.

23.தினசரி வடிக்கப்படும் சிறுநீரின் அளவு (Daily Urine Out put)தினசரிசுமார் 1000 முதல் 1500 மில்லி வரை இருந்திடும்.

24.சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை(Body Temporature) சுமார் 36.8 Degree Centigrade என்ற அளவில் இருந்திடும்.

25.சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 98.4 Degree Foreinheitஎன்ற அளவில் இருந்திடும்.

26.ஹைப்போதைராய்டு (Hypothyroidism)நோய் நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 32O C   DEGREES என்ற அளவில் இருந்திடும்.

27.ஹைப்போதைராய்டு நோய் (Hypothyroidism)நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 89.6O F   DEGREES என்ற அளவில் இருந்திடும்.

28. உடல் வெப்பம் 25O C   DEGREES கீழேஇறங்கினால் மரணம் நிகழும்.

29. உடல் வெப்பம் 77O F   DEGREES கீழே  இறங்கினால் மரணம் நிகழும்.

30. செரிபுரோஸ்பைனல் திரவம் (Cerebro Spinal Fluid)என்னும் மூளை நரம்பு திரவத்தின் அழுத்தம் சுமார் 50முதல் 180 mm Hg என்ற அளவில் இருந்திடும்.

31.கண்கோளத்தின் அழுத்தம் (Intra Occular Pressure)சுமார் 10-20 mm Hg -மெர்க்குறி -என்ற அளவில் இருந்திடும்.

32.ஆண்விதையில் (Testis)சுமார் 200 முதல் 300 வரை லோபுயுல்கள் (Lobules)என்னும் துணை அமைப்புகள் உள்ளன.

33.ஆண்களில்ஸ்பெர்மெட்டோசோவா (Spermatozoa)என்னும் விந்தணுக்கள் உடல் வெப்ப நிலையினைவிட  3O C   DEGREES குறைவாக இருந்திடல் வேண்டும்.

34.ஆண் விதை(Testis) 4.5  C.M.  நீளமும் 2.5 C.M. முதல் 3 C.M.தடிமனும் கொண்டதாகும்.

35.பெரும்பாலோரில் மாதவிலக்கு (Menstrual period)சுமார் 45 முதல் 55 வயதிற்குள் நின்று போகலாம்.

36.மாதவிலக்கு பெரும்பாலோரில் சுமார் 28 நாட்களில் ஏற்படுகிறது.

37.மாதவிலக்கின் மென்ஸ்ட்ருவல் நிலை (Menstrual  Stage)4 நாட்கள்கொண்டதாகும்.

38. மாதவிலக்கின் இரண்டு நிலை களில் முதலாவது நிலையான புரோலிபரேட்டிவ்  நிலை(Prolifertive Stage)  சுமார் 10 நாட்கள் கொண்டதாகும்.

39. மாதவிலக்கின் இரண்டு நிலை களில் இரண்டாவது நிலையான செக்ரீட்டரி நிலை (Secretory Phase)சுமார் 14 நாட்கள் கொண்டதாகும்.

40. ஒரு பெண்னின்  ஓவுலோவன்(Ovulation) எனப்படும் பெண் கருமுட்டை (Ovum)உற்பத்தி ஒவ்வொரு 40 நாட்களில் நடைபெறுகிறது.

41.காலும் வயிறும் இணையும் இடத்தில் உள்ள இங்குவனைல் கேனால் (Inguinal Canal)என்னும்  வளையம் சுமார் 2.5 செ.மி. முதல் 4 செ.மி. வரை இருந்திடும்.

42.காலர்போன் (Collar Bone)என்னும் கழுத்து எலும்பு கருவின்எட்டாவது வாரத்தில் அமைகிறது.

43.எலும்புகளில் ஆசிபிகேஸன் (Ossification)என்னும் எலும்பு வளர்ச்சி 21 வயதிற்குள் முடிந்துபோகிறது.

44.சிறுநீரில் (Urine)சுமார் 96 சதவிகிதம் நீரும் 2 சதவிகிதம்யூரியாவும் (Urea)மீதம் 2 சதவிகிதம் மற்ற பொருள்களும் சேர்ந்திருக்கும்.

45.சிறுநீரின் அளவு தினசரி 500 மில்லிக்கு குறைந்திடாமல் இருந்திடல் வேண்டும்.

46.இரத்தத்தில் 160 மி.கி / மில்லி லிட்டர் என்ற

அளவிற்குமேல்குளுக்கோஸ்(Glucose)இருந்திட்டால் இந்நிலையில்சிறுநீரில்குளுக்கோஸ் (Glycosuria)
வெளிப்படும்.

47.சிறுநீரகம் (Kidneys)ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்கள் (Nephrons)என்னும் நுண்வடிப்பான்கள்  உள்ளன.

48.சிறுநீரகம் சுமார் 11 C.M  நீளம் கொண்டதாகும்.

49.சிறுநீரகம் சுமார் 6 CM. அகலம் கொண்டதாகும்.

50.சிறுநீரகம் சுமார் 3 C.M. தடிமன் கொண்டதாகும்.

51.சிறுநீரகம் (kidneys)சுமார் 150 கிராம் எடை கொண்டதாகும்.
52. A வகை ஹெப்பாடைட்டிஸ் வைரஸ் (Hepatitis)உடலில்புகுந்த
பிறகு சுமார் 15 முதல் 40 நாட்களில்நோயினை வெளிப்படுத்திடுகிறது.
53.இதுவரை சுமார் 20 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids)கண்டறியப்பட்டுள்ளன.
54.சுமார் 9 வகை அமினோ அமிலங்கள் (Amino acids)நமது உடலில் தயாரிக்கப்படுவதில்லை.
55.தினசரி சுமார் 500 மில்லி லிட்டர் பித்த நீர் (Bile Acids)சுரக்கிறது.

56.கனையம்(Pancreas)சுமார் 60 கிராம் எடை கொண்டது
57.கனையத்தின் நீளம் 12 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை இருந்திடும்.
58.குடலில் (Intestines)உள்ள எப்பிதீலியம் செல்கள்(Epithelial Cells)3 முதல் 5 நாட்களில் உதிர்வடைகிறது.
59.ஜிஜனம் (Jejunum)என்னும் சிறுகுடல் (Small Intestine)பகுதி சுமார் 2 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
60.டியோடினம் (Duodenum)என்னும் குடல் பகுதி சுமார் 25 செ.மீ.நீளமுள்ளது

.61.வயிற்றில் (Stomach)சுமார் 2 லிட்டர் கேஸ்ட்ரிக் அமிலம்(Gastric Acid)தினசரி சுரக்கப்படுகிறது.
62.ஈசோபேகஸ் (Esophagus)என்னும் விழுங்குழல் சுமார் 25 செ.மீ. நீளம்
கொண்டதாகும்.
63.விழுங்குழல் (Osophagus)சுமார் 2 செ.மீ. அகலம் கொண்டதாகும்.
64.உமிழ்நீரின்  (Saliva)pH சுமார் 5.8 முதல் 7.4 வரை இருக்கும்.
 65.உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளன.

 66.  65 கிலோ எடை கொண்ட நபர்களின் உடலில் சுமார் 40 லிட்டர்  நீர் (Body Water)அமைந்திருக்கும்.
67.உடலில் உள்ள செல்களின் உள்ளே (Intracellular)உள்ள மொத்த நீரின் (Total Body Water)அளவு சுமார் 28 லிட்டர் அளவிற்கு இருந்திடும். 🦚மலையமுது🦚
68.உடலில் உள்ள செல்களுக்கு வெளியே (Extracellular)உள்ள செல்கள் சுமார் 12 லிட்டர் அளவிற்கு இருந்திடும்.
69.வாயு மாற்றத்தில் (Gas Exchange)பங்கெடுத்திடும் நுரையீரல் (Lung)திசுக்களின் பரப்பளவு(Surface Area) சுமார் 70 முதல் 80 சதுர மீட்டர் அளவிற்கு இருந்திடும்.
70.உள்ளிழுக்கப்படும் காற்றில் (Inspired Air)சுமார் 21 சதவிகித ஆக்ஸிஜன் (Oxygen)உள்ளன.

71.வெளிவிடப்படும் காற்றில் (Expired Air)சுமார் 16 சதவிகிதம்ஆக்ஸிஜன் அமைந்துள்ளது.
72.நமது உடலில் விலா எலும்புகள் (Ribs)சுமார் 12 ஜோடிகள் உள்ளன.
73.20 முதல் 20000 ஹெர்ட்ஸ் (Hertz)அளவுகொண்ட ஒலிகளை மட்டுமே நம்மால் கேட்டிட இயலும்.
74.மூளைக்கு (Brain)இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் (Cardiac Output)இரத்தத்தில் சுமார் 15 சதவிகிதம்அளவு தேவைப்படுகிறது. 
75.மூளைத்தண்டுவடம் (Spinal Cord)சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது.

76.மூளைக்கு நிமிடத்திற்கு சுமார் 700 மில்லி இரத்தம் தேவைப்படுகிறது.
77.மூளைத்திரவத்தின் (Cerebrospinal Fluid)அடர்த்தி (Specific Gavity)எண் 1.005 ஆகும்.
78.மேலேரும் மகாதமனி (Ascending Aorta)சுமார் 5 செ.மீ. நீளமுள்ளதாகும்.
79.சிஸ்டாலிக் அழுத்தத்திற்கும்(Systolic Pressure)டயஸ்டாலிக் அழுத்தத்திற்கும் (Diastolic Pressure)உள்ள வேறுபாடு பல்ஸ் அழுத்தம் (Pulse Pressure)எனப்படும்.
80.பல்ஸ் அழுத்தம் (Pulse Pressure)சுமார் 40.மி.மீ. மெர்குரி (Mercury)என்ற அளவில் இருந்திடும்.

81.குளுக்கோகார்டிகாய்டு (Glucocorticoid)என்னும் உடலின் இயற்கையான ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் அதிகாலை 4 A.M. to  8 A.M.நேரத்தில் அதிகளவு இருந்திடும்.
82.குளுக்கோ கார்டிகாய்டு (Glucocorticoid)என்னும் உடலின் இயற்கை ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் நடு இரவு முதல் அதிகாலை 3 மணிவரை மிகக் குறைந்த  அளவே இருந்திடும்.
83.தைராய்டு சுரப்பி (Thyroid Gland)சுமார் 20 கிராம் எடை கொண்டதாகும்.
84.பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland)சுமார் 500 மில்லி கிராம் எடை கொண்டதாகும்.
85.கண்ணீர் சுரப்பியின் வடிகுழாய் (Lacrymal Gland)சுமார் 2மி.மீ. நீளம் கொண்டதாகும்.

86. ஒளியின் வேகம் (Velocity of Light)1800000  கி.மீ. ஒரு நிமிடத்தில் (3.00000 K,M/SEC).
87.கண்கோளம்(Eye Ball)சுமார் 2.5 செ.மீ. விட்டம் கொண்டதாகும்.
88.மூளை திரவம் (Cerebrospinal Fluid)ஒரு நிமிடத்திற்கு சுமார் 0.5 மில்லி சுரக்கப்படுகிறது.
89.மூளை திரவம் தினசரி சுமார் 720 மில்லி சுரக்கிறது.
90.மூளை திரவத்தில் (Cerebrospinal Fliud)அழுத்தம் படுத்தநிலையில்சுமார் 10செ.மீ. (நீர்) அளவிற்கு இருந்திடும்.

91.மூளை திரவத்தில் (Cerebrospinal Fliud)அழுத்தம் நின்ற நிலையில்சுமார் 30செ.மீ. (நீர்) அளவு இருந்திடும்.
92.இதய பெருவறைகள்(Left Ventricle)ஒரு முறை சுருக்கமடைந்திடும் பொழுது சுமார் 70 மில்லி
இரத்தம் பெரும் இரத்தக் குழாய்களில் வெளியேற்றப்படுகிறது(Stroke Volume).
93.இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 5 லிட்டர்
இரத்தத்தை வெளியேற்றுகிறது(Cardiac Output).
94.உடற்பயிற்சியின்(Exertion)போது இதயம் ஒரு நிமிடநேரத்தில் சுமார் 25 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது.
95.நல்ல விளையாட்டு வீரர்களின் (Athletic)இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 35 லிட்டர் வரை இரத்தத்தை வெளியேற்றுகிறது.

96.இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 60 தடவைகள்
முதல் 80 தடவைகள் வரை சுருக்கமடைகிறது.
97.இதய பெருவறைகள் சுருக்கமடைந்திட(Cardiac Contraction)சுமார் 0.3 செகண்ட் காலம் ஆகிறது.
98.இதய பெருவறைகள் விரிவடைந்திட (Cardiac Dilatation)சுமார் 0.4 செகண்ட் காலம் ஆகிறது.
99.இதயத்தின் நுனிப்பகுதி (Cardiac Apex )இடது மார்பின் (Left Chest)5 வது விலா எலும்பு இடைவெளியில் (Intercostal Space)அமைந்துள்ளது.
100.இதயத்தின் நுனிப்பகுதி (Cardiac Apex)மார்பின் மையப் பகுதியிலிருந்து (Midline)இடது பக்கம் சுமார் 9செ.மீ. தள்ளி இருக்கிறது.

நன்றி மருத்துவ அளவீட்டு குறிப்பிலிருந்து .

நன்றி ..... வாழ்க வளமுடன் .

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H