
சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 320 குறைந்தது.
இதனால், நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை இந்த
மாதம் தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்தது. ஒரு வாரம் உயர்வுக்கு பிறகு
தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு
கிராம் தங்கம் 4,937க்கும், சவரன் 39,496க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில்
நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு 40
குறைந்து ஒரு கிராம் 4,897க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன்
39,176க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 320
குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, சவரன் 39 ஆயிரத்துக்குள் வந்துள்ளது
மேலும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் வரும் நாட்களிலும்
தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்படும் என்று தங்க நகை
வியாபாரிகள் கூறியுள்ளனர்.