உடலுக்குள் பதியும் சர்க்கரை மானி.
இதயத் துடிப்பை சீராக்க, உடலுக்குள் பதிக்கப்படும், 'பேஸ் மேக்கர்' போல, நீரிழிவு உள்ளோரது உடலில், சர்க்கரையை அளக்கும் கருவியையும் பதிக்க முடியுமா என ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
சர்க்கரையை தொடர்ந்து அளக்கும் இந்த சிறிய கருவிக்கு, மின்கலன் தேவை. ஆனால், மின்கலனில் உள்ள நச்சுக்கள் நாளடைவில் உடலில் கலக்காமல் இருக்க வேண்டும். தவிர, மின்கலன் செயல்பாடு குறைந்தால், அதை மாற்ற, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டும்.
இந்த சிக்கலை தவிர்க்க, சவுதி அரேபியாவிலுள்ள, மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு சிறிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கருவிக்கு மின்கலன் தேவையில்லை. மாறாக, உடலிலுள்ள குளுகோஸ் சத்திலிருந்தே அது மின்சாரம் தயாரித்து, நோயாளியின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தொடர்ந்து கண்காணித்து, அளவுகளையும், எச்சரிக்கையையும் நோயாளிக்கு தெரிவிக்கும்.இதயத் துடிப்பை சீராக்க, உடலுக்குள் பதிக்கப்படும், 'பேஸ் மேக்கர்' போல, நீரிழிவு உள்ளோரது உடலில், சர்க்கரையை அளக்கும் கருவியையும் பதிக்க முடியுமா என ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
சர்க்கரையை தொடர்ந்து அளக்கும் இந்த சிறிய கருவிக்கு, மின்கலன் தேவை. ஆனால், மின்கலனில் உள்ள நச்சுக்கள் நாளடைவில் உடலில் கலக்காமல் இருக்க வேண்டும். தவிர, மின்கலன் செயல்பாடு குறைந்தால், அதை மாற்ற, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டும்.
இந்த சிக்கலை தவிர்க்க, சவுதி அரேபியாவிலுள்ள, மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு சிறிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், முழுக்க முழுக்க உயிரி பாலிமர்களாலேயே இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, கருவியின் உலோகங்களால் நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது.
இந்த புதுமையை தற்போது சவுதி விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் இது, உலக சர்க்கரை நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்படலாம்.