சென்னை பல்கலைக்கழகம்:
மாணவர்கள் ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம்.
இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் இல்லை.
18 பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதி அனுப்பி வைக்க வேண்டும்.
-சென்னை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை: துணை வேந்தர் விளக்கம்
♈சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை, ஆன்லைனில் அனுப்பப்படும் கேள்வித்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வீட்டில் தேர்வு எழுத வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி விளக்கம் அளித்துள்ளார். தேர்வை 2 மணி நேரத்தில் எழுதி மாணவர்கள் புகைப்படம் எடுத்து மீண்டும் ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.