ரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!Job opportunity in the Central Government's DGCA Civil Aviation Company with a salary of Rs. 4.22 lakhs! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad


https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Monday, 21 September 2020

ரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!Job opportunity in the Central Government's DGCA Civil Aviation Company with a salary of Rs. 4.22 lakhs!

 ரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
மத்திய அரசிற்கு உட்பட்ட Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள விமான செயல்பாட்டு ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 32 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.4.22 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். ரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! ரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! நிர்வாகம் : Directorate General of Civil Aviation (DGCA) மேலாண்மை : மத்திய அரசு பணி மற்றும் காலிப் பணியிட விபரம் Flight Operations Inspector (Aeroplane) - 29 Flight Operations Inspector (Helicopter) - 03 மொத்த காலிப் பணியிடம் : 32 வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க. ஊதியம் : Flight Operations Inspector (Aeroplane) - ரூ.4,22,800 Flight Operations Inspector (Helicopter) - ரூ.2,50,800 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://dgca.gov.in/digigov-portal/# என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Recruitment Cell, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dgca.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.