வட கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு பெய்யும், குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி அவலாஞ்சியில் 20 சென்டி மீட்டர் மழையும், பந்தலூரில் 14 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மத்திய வங்கக் கடல், தென்மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.