
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்
ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.20.201.1 வெளியாகி இருக்கிறது. புதிய பீட்டா
பதிப்பில் எக்ஸ்பைரிங் மீடியா எனும் புதிய அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது
ஸ்னாப்சாட் மற்றும் டெரிகிராம் செயலிகளில் உள்ள டிஸ்-அபியரிங் மீடியா
அம்சம் போன்றே செயல்படுகிறது.
இதில் உள்ள மீடியா
பிரிவில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த அம்சம் வாட்ஸ்அப் ஏற்கனவே சோதனை செய்து வரும் எக்ஸ்பைரிங் மெசேஜஸ்
போன்றே இயங்கும்.

இந்த
அம்சத்தை ஆக்டிவேட் செய்ததும், ஆட் மீடியா பட்டன் அருகில் புதிய ஐகான்
தெரியும். அதனை க்ளிக் செய்ததும், குறிப்பிட்ட மீடியா எக்ஸ்பைரிங்
மீடியாவாக அனுப்பப்படும். இதனை பெறுபவர் பார்த்தால், அதன் பின் சாட்
பாக்சில் இருந்து காணாமல் போய்விடும்.
தற்சமயம்
காணால் போகும் மீடியாவை குறிக்கும் தகவல் இடம்பெறவில்லை. மேலும் பயனர்
பெற்ற மீடியாவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தாரா என்பதை குறிக்கும் தகவல்
இடம்பெறவில்லை. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதனால் இது
ஸ்டேபில் அப்டேட்டில் கிடைக்க சில காலம் ஆகும் என தெரிகிறது.