முட்டை நன்மைகள் :
உடல் நல்ல கட்டமைப்புடன் இருக்க வேண்டுமானால் தினமும் முட்டை சாப்பிட்டு வாருங்கள்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. முட்டையில் உள்ள நூறு சதவீத சுத்தமான புரதசத்து நம் உடலின் வளர்ச்சி மற்றும் இயக்கத்திற்கு முக்கிய தேவையாக அமைகின்றது.
எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின், ‘டி’ முட்டையில் உள்ளது. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. மேலும் ஒமேகா-3 கொழுப்பு நிறைந்துள்ளது.
தோலுக்கு தேவையான விற்றமின் E, ரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சிக்கு ஆதாரமான இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஜிங்க் முட்டையில் உள்ளது.
முட்டையில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம் நிறைந்த உணவுகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்ச முக்கிய பங்கு வகுக்கின்றது மெக்னீசியம், இந்த மெக்னீசியம் முட்டையில் உள்ளது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.
தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் வளமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் இதய நோய், பக்கவாதம் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
முட்டை சாப்பிட்டால், பாலுணர்ச்சி அதிகரிக்கும், மூளை மிகவும் ஆரோக்கியமடையும், மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும், புற்றுநோய் வரும் ஆபத்து குறையும், எலும்புகள் வலிமையுடன் இருக்கும்,
நகம் மற்றும் முடி ஆரோக்கியமடையும்.
எதிலும் கிடைக்காத கோலைன் என்னும் இன்றியமையாத சத்தானது, முட்டையில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த கோலைனானது செல் மென்படலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உற்பத்தி செய்து, மற்ற செயல்பாடுகளை சீராக செயல்பட மிகவும் இன்றியமையாதது.
வெள்ளைக்கருவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். இதயத்துக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும். ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவும்.
வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ, பி 12 மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. வைட்டமின் பி12 தசை சிதைவு, கண் புரை, ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க துணைபுரியும்.
வெள்ளைக்கருவை சாப்பிடும் வேளையில் மஞ்சள் கருவை ஒதுக்கிவிடவும் கூடாது. அதில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. முக்கியமாக கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வெள்ளைக்கருவைவிட மஞ்சள் கருவில் அதிகம் இருக்கின்றன.
முட்டையில் அதிக அளவு புரதம் மற்றும் செலினியம் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவுகின்றது. எனவே தினமும் இரண்டு முட்டை உண்டு ஆரோக்கியம் அடையுங்கள்.
குறிப்பு : பிராய்லர் கோழி முட்டையா ? நாட்டுக்கோழி முட்டையா ? வாத்து முட்டையா ? காடை முட்டையா ? என்று தயங்காதீர்கள். அனைத்து முட்டையிலும் நன்மை உள்ளது .
வாத்து முட்டையில் கோழி முட்டையை விட அதிக அளவு புரதம் உள்ளது. மேலும் மைக்ரோபையல் தன்மை (செல்லுக்கு ஊட்டம்) அதிகம் உள்ளது.
காடை முட்டையில் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளது. இது நம் கல்லீரலுக்கு ஊட்டமளிக்கும்.









