அடுத்த இரண்டு நாளைக்கு Google Pay, PhonePe, Paytm செயலிகள் இயங்காது!!
UPI பயனர்கள் அடுத்த சில நாட்களுக்கு 1 AM முதல் 3 AM வரை பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!
அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) காலை 1 மணி முதல் 3 மணி வரை செயல்படாது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு UPI இயங்குதளம் மேம்படுத்தல் செயல்பாட்டின் கீழ் இருக்கும் என்று பயனர்களுக்கு NPCI தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து NPCI குறிப்பிட்டுள்ளதாவது., "UPI பரிவர்த்தனைகளின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்க, UPI இயங்குதளம் அடுத்த சில நாட்களுக்கு 1 AM - 3 AM முதல் மேம்படுத்தும் பணியின் கீழ் இருக்கும்" என்று NPCI குறிப்பிட்டுள்ளது.
பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும், சிரமங்களைத் தவிர்ப்பதற்காக அந்த நேரத்திற்கு முன்பே தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட NPCI அறிவுறுத்தியுள்ளது. Google Pay, PhonePe போன்ற முக்கிய டிஜிட்டல் கொடுப்பனவு தளங்கள் UPI கணினியில் வேலை செய்ய விரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.