ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "மக்கள் முதல்வா் என நமது முதல்வரை அனைவரும் பாராட்டிவருகின்றனா். இன்னும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற இருக்கிறது. பள்ளி திறந்தவுடன் அரசு மாணவர்கள் அனைவருக்கும் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடத்தபடும் செய்முறை தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். பள்ளிகளை திறக்க பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்பு இன்று முதல் தொடங்கி இந்த வாரம் இறுதி வரை நடைபெறும்.
20 சதவிகித அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது உண்மைதான். கூடுதலாக மாணவா்கள் வருகின்ற போது பற்றாக்குறை ஏற்படும். தற்போது குறைந்தளவு வகுப்பறைகள் திறக்க மட்டுமே முதல்வா் முடிவுகள் மேற்கொள்ள இருக்கிறாா். அனைத்து வகுப்பறைகளும் திறக்கும் போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா என்பது தோதல் வருகின்றபோது தான் தொியும். பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்பு விடுமுறை குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்" எனக் கூறினார்.