அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது மூட்டு பகுதியில் உண்டாகும் தேய்மானத்தை கட்டுபடுத்தி வலியினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது.
அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. மேலும் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.