
முன்னுரை
பாடநூல்கள் மற்றும் பிற கல்வி சார் பொருட்களை பெறுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை சார்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முறையாக பின்பற்ற வகைசெய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள் / ஆசிரியர்கள் / ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக பின்பற்றப்பட வேண்டிய சுகாதார மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 5.10.2020 அன்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் கோவிட் -19 தொடர்பாக அரசு தற்போது பின்வரும் நிலையான வழிகாட்டு நெறி முறைகளை (SOP) வெளியிடுகிறது.
முதல் கட்டமாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு ------ தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் (அரசால் எடுக்கப்படும் முடிவுக்கு உட்பட்டு) பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்
ஒரு வகுப்பில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின், ஒரு தொகுதிக்கு (Batch) 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும். ஆனால், சமூக இடைவெளியைப் பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால், கூடுதல் இருக்கைகளை அமைப்பதன் மூலம் அதிக மாணவர்களுக்கு இடமளிக்கலாம்.
இதுபோன்ற நிலையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு அறைகளில் கற்றுக் கொடுக்கப்படலாம். அதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
பொதுவானவை
1. இணையவழி / தொலைதுார கற்றல் முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும்
2. பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தும்போது, சில மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருவதை விட இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அவர்கள் அவ்வாறு கலந்து கொள்ள அனுமதிக்கப்படலாம்
தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை மீள திறக்கலாம்
4. பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்
5. பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்கள்
அவ்வாறே அனுமதிக்கப்படலாம்
மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது, அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும்.
7. அத்தகைய மாணவர்களின் கற்றல் விளைவுகளின் முன்னேற்றத்திற்கு தக்க முறையில் திட்டமிடப்பட வேண்டும்
8. அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் / பணியாளர்களும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
மேலும் விரிவாக படிக்க









