தேர்தல் பணி : 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது .சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பட்டி யலில் 50 வயதுக்கு மேற்பட்டோரை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத் தியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிர மாக மேற்கொண்டு வருகிறது .
இதற்கிடையே வாக்குசாவடி கண்காணிப்பு உட்பட தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர் கள்தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர் . இதைக் கருத்தில்
கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும்
பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . இதையடுத்து பள்ளித்
தலைமையாசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற் றும்
அலுவலர்களின் பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில்
சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .