இது பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :-
2012ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 16500பகுதிநேர ஆசிரியர்களை 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார்.
இதில் 4 ஆயிரம் காலியிடங்களால் ஏற்பட்டு தற்போது 12ஆயிரம் ஆசிரியர்களே உள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல்
ரூ7700 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இதனை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2300 ரூபாய் உயர்த்தி இனி ரூபாய் 10ஆயிரமாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் 12500 பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க மாதம் ஒன்றுக்கு இனி 12 கோடி செலவாகும்.
இதனை இன்னொரு மடங்கு உயர்த்தி கொடுத்து எங்களை நிரந்தரம் செய்ய அமைச்சரவை கொள்கை முடிவை அறிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வேலைக்கு சேர்ந்து 10 கல்வி ஆண்டுகள் ஆகிறது.
எனவே இப்போது நடைமுறையில் இருக்கும் வாரம் 3 அரைநாட்கள் என மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிவதை, இனி அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரமும் பணியை நீட்டிக்க வேண்டும்.
எங்களை முன்னேற்ற அரசு நடவடிக்க எடுக்க வேண்டும்.
எங்களின் குடும்பங்கள் மேம்பட காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும்
2017 ஆம் ஆண்டே சட்டசபையில் கல்விஅமைச்சர் செங்கோட்டையன் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை எப்போதே நிரந்தரம் செய்து இருக்க வேண்டும்.
விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கு முன்பே இடைக்கால பட்ஜெட்டும் படிக்கப்பட உள்ளது.
எனவே 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யும் மாபெரும் அறிவிப்பை இந்த அரசு செய்திட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.
இதற்காக அரசு தாயுள்ளதுடன் மாதம் ஒன்றுக்கு மேலும் 10 கோடி நிதி ஒதுக்கினாலே போதும்.
இதை செய்ய அரசு மனசு வைத்தால் போதும்.
ஒவ்வொரு சமயத்திலும் புதிது புதிதாக வெவ்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகிறது.
இப்போது செய்யாமல் வேறு எப்போது செய்ய முடியும்.
எங்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஒரு முடிவு எடுங்கள்.
தொடர்புக்கு :-
சி. செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல்: 9487257203
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் குறித்து அமைச்சரவை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.