தமிழகத்தில்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, பாடப்புத்தகங்களை அனுப்ப
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த
அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பரவல்
குறைந்து வரும் நிலையில், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை, ஜூன்
3-வது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அனைத்து
மாவட்டங்களிலும் குடோன்களில் இருக்கக்கூடிய விலையில்லா பாடப் புத்தகங்களை,
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்க, முதன்மை
கல்வி அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது
.இதன்படி, சுமார் 5 கோடி பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட
உள்ளன. இதனால், பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்
என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன