தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி...
தோல்வி
தோல்வி
நிலையானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு வெற்றிகரமான வாழ்க்கையில்
அது ஒரு சிறு பின்னடைவு அவ்வளவுதான். அந்த சிறு நிகழ்வை வேலைப்பாடு மிகுந்த
அழகிய திரைச்சீலையாக மாற்றுவது உங்கள் படைப்பு சாதனை. மீண்டும் நினைவில்
கொள்ளுங்கள், தோல்வி ஒரு தற்காலிக நிகழ்வே.
தவறு.
தோல்வி
என்பது ஒன்றைத் தவறாகச் செய்தலே என்று அர்த்தப்படுத்தப்படுகிறது.
இதிலிருந்து தோல்வியிலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதைப் புரிந்து
கொள்ளலாம். ஒரு விஷயத்தை எப்படி அணுகக் கூடாது என்பதை அது நமக்கு கற்றுத்
தருகிறது. ஒன்றை எப்படி செய்யக்கூடாது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால்,
அதை எப்படி நேர்த்தியாக செய்வது என்பதையும் நீங்கள் அறிந்து
கொண்டுவிடுவீர்கள்.
3. கற்றல்
உங்கள் தோல்விகளிலிருந்து,
தவறான பாதை எது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்ட நிலையில், உங்கள்
வெற்றிகள் உங்களுக்கு அதை விடவும் சிறந்த பாடங்களைக் கற்றுத் தரும். அதன்
பின் நேர்வழி எது என்பது பற்றி உங்களுக்கு சந்தேகமே இருக்காது.
4. ஒருபோதும் வேண்டாம்
தோல்விகளை
ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். தோல்விக்கான சூழல்களை உங்கள்
நினைவுகளிலிருந்து விலக்கியே வையங்கள். வெற்றித் துணுக்குகளை மனதுக்குள்
அசைபோடுங்கள்.
5. சிந்தனை
தாமஸ் ஏ. எடிசன் தன்னுடைய அலுவலக
வாசலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “இதை இன்னும் சிறந்த வழியில்
செய்யலாம். அதைக் கண்டுபிடியுங்கள்.” எல்லாம் சரி. ஆனால் அதை எப்படிக்
கண்டுபிடிப்பது. பிரார்த்தனையால் முடுக்கப்பட்ட ஒழுக்கம் மற்றும் படைப்பு
சிந்தனை அதற்கு உதவும்.
6. சுறு சுறுப்பு
தளராத உழைப்பு
இன்றி வெற்றிகள் சாத்தியமே இல்லை. தளராத மனதுடன் உழைப்பு.. மேலும் உழைப்பு
என்றிருப்பதே வெற்றிச் சாதனையின் ‘திறவுகோல்’. கடினமாய் உழைக்கும்
திறனும், அதைத் தொடர்ந்து செய்து வருவதுமே வெற்றிமாலை சூடச்செய்யும்.
7. இலக்கு
வெற்றியாளர்கள்
அனைவருக்குமே ஒரு இலக்கு இருக்கும். ஆனால் அது ஒளி மங்கிய, முடிவற்ற
ஒன்றாக இருக்காது. மாறாக தீர்க்கமான, தெளிவாக விளக்கக்கூடிய, வரன்
முறைக்குள் அடங்கியதாக இருக்கும். எங்கே போக வேண்டும் என்று
தெளிவில்லாதவனால் எங்கேயுமே போகமுடியாது. எனவே ஒரு உறுதியான, பிராத்தனையை
மையமிட்ட ஒரு இலக்கை வகுத்துக் கொள்ளுங்கள்.
8. நேர்மை
எப்போதுமே
உங்கள் இலக்கு நேர்மையானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் தவறான ஒரு இலக்கு ஒருபோதுமே சரியானதாக இருக்காது. தவறு,
தவறில்தான் போய் முடியும். நேர்வழியே, நேர்நிலையை உருவாக்கும். எனவே
எப்போதும் நேர்மையாகவே இருங்கள்.
9. கேள்வி
உங்கள்
வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டியதைத்தான் இப்போது செய்து
கொண்டிருக்கிறீர்களா என்று கடவுளிடம் கேளுங்கள். அவர் வழிகாட்டுவார்.
இறுதி கணக்கீட்டின்போது கடவுள் காட்டிய வாழ்க்கைதான் நிலையான உண்மையை
சென்றடையும்.
10. நல்வழி
சுயநலமற்ற பிரார்த்தனையே
வெற்றிக்கான நிச்சய வழி. இந்த உலகில் நீங்கள் செய்ய விரும்பும்
மிகச்சிறந்தவற்றைப் பற்றி ஆழமாக சிந்தியுங்கள். உயர்ந்த மதிப்பீடுகளை
எட்டிப் பிடியுங்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்த மனித
குலத்துக்கானதாக இருக்கட்டும். அனைத்துவிதமான உங்கள் வாழ்வியல்
அனுபவங்களையும், வெற்றி முனைப்பு என்னும் தளத்தில் குவியுங்கள்.
இதை புரிந்துகொண்டால் ...