
தமிழகத்தில் உள்ள 11 மருத்துவக்கல்லூரிகளில் மத்திய குழு ஆய்வு செய்த பின்னர், அங்கு மாணவர்களின் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிண்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து கூடுதல் தடுப்பூசி, 1 கோடி சிறப்பு தடுப்பூசி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைக்கேட்ட அமைச்சரும், பிரதமரும் வரும் மாதங்களில் கூடுதல் தடுப்பூசிகள் நீங்கள் கேட்ட வகையில் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். டெங்கு காய்ச்சலை பொறுத்த வரையில், அது ஏற்படாமல் இருக்க தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீடுகள் தோறும் அதிகாரிகள் சென்று சோதனை செய்து, டெங்கு வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள 11 மருத்துவக்கல்லூரிகள் தொடர்பான விஷயங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய ஆய்வுக்குழு வந்து ஆய்வு செய்த பின்னர், 11 மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக அறிவிக்கப்படும் " என்று தெரிவித்தார்.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.