புதுச்சேரியில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.
புதுச்சேரி : புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அன்றைய தினமே கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, கல்வி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பையும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கல்வி மற்றும் உயர்கல்வி துறை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். விரைவில் இதுபற்றி அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.









