உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

  

 


YoutubeWhatsapp GroupFacebookTelegram
Click HereClick HereClick HereClick Here

Saturday, 25 September 2021

உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

பெருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அமல்படுத்தும்படி சென்னை உயர் நீதிம்னறம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒன்றிய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுதும் ஒரே மாதிரியான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாதிரியான இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியாது.

அதனால் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கக் கூடியதுதான். அதே நேரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’ என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து ஒன்றிய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதில், ‘இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறியுள்ளது.

எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், உச்ச நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்று அது பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,’ என நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோல், உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மருத்துவ மேற்படிப்பிலும் பின்பற்றும்படி தேசிய தேர்வுகள் முகமை உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.