TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2021 – கல்வித்தகுதி, வயது வரம்பு & சம்பளம்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

 


 


 


YoutubeWhatsapp GroupFacebookTelegram
Click HereClick HereClick HereClick Here

Saturday, 16 October 2021

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2021 – கல்வித்தகுதி, வயது வரம்பு & சம்பளம்!

 


.com/
 

தமிழக அரசுத்துறை காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம் குறித்த சில முக்கியமான விவரங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இடைநிறுத்தப்பட்ட தேர்வுகளை நடத்தற்கு முடிவு செய்துள்ள TNPSC வாரியம் இம்மாதம் குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இம்மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டால் தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்படும் என தெரிகிறது. இப்போது குரூப் 4 தேர்வுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டிய கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம் குறித்த சில முக்கியமான விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜீ தமிழ் சேனலில் ‘அன்பே சிவம்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பு – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பதவிகள்:

இளநிலை உதவியாளர் (Junior Assistant)

தட்டச்சர் (Typist).

சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)

கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)

வரித் தண்டலர் (Bill Collector)

நில அளவர் (Field Surveyor)

வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி:

இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது அடிப்படை கல்வித்தகுதியாகும்.

ஆனால், தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தேர்ச்சி அவசியமாகும்.

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி அவசியமாகும்.

இந்த தகுதி உடையவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு 18 முதல் 30 வரை ஆகும்.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

மற்ற வகுப்பினர்களுக்கு 40 வயது அவசியமாகும்.

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பணிகளில் பொதுபிரிவினருக்கு 18 – 30 வரையும் பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரையும் சலுகை கொடுக்கப்படுகிறது.

தவிர மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை:

இத்தேர்வு எழுத்து தேர்வை மையமாக கொண்டது.

இந்த எழுத்துத்தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும்.

ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

அனைத்து வினாக்களும் Objective Type இருந்து கேட்கப்படும்.

பாடத்திட்டம்:

இதில் 100 வினாக்களில் 75 பொது அறிவு மற்றும் 25 திறனறி வினாக்களும் அடங்கும்.

அறிவியல் – இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

நடப்பு நிகழ்வுகள் – வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்.

புவியியல் – புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்.

வரலாறு – சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகரம் மற்றும் பாமினி அரசுகள்.


தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு.


இந்திய அரசியல் – அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ்.

இந்திய தேசிய இயக்கம் – தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் பங்கு.

திறனறி வினாக்கள் :

தர்க்கஅறிவு (Reasoning), சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்ப முறை:

இத்தேர்வுக்கு TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் அவசியம் இல்லை.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.